காதலனுடன் சென்ற இளம் காதலி களனி ஆற்றில் விழுந்து பரிதாபமாக பலி
கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றின் அருகே தனது காதலன் மற்றும் மூன்று பேருடன் முச்சக்கர வண்டியை கழுவச் சென்ற பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தண்ணீர் எடுக்க சென்ற காதலனும் காதலியும் திடீரென ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
காதலி நீரில் மூழ்கியபோது காதலன் அங்கு மீட்கப்பட்டார்.
இன்று மதியம் நீரில் மூழ்கிய பெண்ணின் உடலை மீட்பு குழுக்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவருடன் வந்த மற்றொரு குழுவும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.