இந்தியப் பெருங்கடலில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?

இந்தியப் பெருங்கடலில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?

இந்தியப் பெருங்கடலில் இன்று (01) அதிகாலை 6.0 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதி முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதி என்பதால் உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் தொடர்பில் எதுவும் பதிவாகவில்லை.

இந்தியப் பெருங்கடலில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா? | Powerful Earthquake In The Indian Oceanஇதனால் இலங்கை மற்றும் இந்திய கடற்கரைகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந் நிலநடுக்கமானது, இந்தியப் பெருங்கடலின் டெக்டோனிக் தட்டு எல்லைகளுக்கருகில் நிகழும் வழக்கமான நில அதிர்வுகளில் ஒன்றாகும்.

இப் பகுதியில் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகுவது இயல்பானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.