போதைப்பொருள்களுடன் ஒரே நாளில் 971பேர் கைது

போதைப்பொருள்களுடன் ஒரே நாளில் 971பேர் கைது

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்று(31.10.2025) மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது 971 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது 735 கிராம் 9 மில்லிகிராம் ஹெரோயின், 2 கிலோகிராம் 422 கிராம் 13 மில்லிகிராம் ஐஸ், 603 கிராம் 84 மில்லிகிராம் கஞ்சா, 97 ஆயிரத்து 283 கிராம் கஞ்சா செடிகள், ஒரு கிராம் 3 மில்லிகிராம் குஷ்ரக போதைப்பொருள், 27 கிராம் 3 மில்லிகிராம் ஹஸீஸ் ரக போதைப்பொருள், 1305 போதை மாத்திரைகள் மற்றும் 254 கிராம் 79 மில்லிகிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தப் போதைப்பொருள்களுடன் 971 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 22 பேர் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்றுள்ளனர்.

போதைப்பொருள்களுடன் ஒரே நாளில் 971பேர் கைது | 971 People Arrested With Drugs In A Single Day

அதேநேரம், அவர்களில் 10 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.