தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் வாராந்திர ஏலத்தில் சராசரி தேங்காய் விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக 5 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தெங்கு அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை 128,060 ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச விலை குறிப்பிடப்படவில்லை.
அத்துடன் 250 கிலோ கொப்பரை 115,000 முதல் 132,500 ரூபாய் வரை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில், இடைத்தரகர்கள் இலாப மீட்டுவதனூடாகவே தேங்காய்க்கான விலை அதிகரித்துள்ளதாக தெங்கு உற்பத்தி சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஏலத்தில் 134 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் தேய்காய் ஒன்றை 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனூடாக இடைத்தரகர்கள் 40 முதல் 50 ரூபாய் வரை இலாப மீட்டப்படுவதாக தெங்கு உற்பத்தி சபை குறிப்பிட்டுள்ளது.
தேங்காய்க்கான நிர்ணய விலை அறிவிக்காமையும், விலை அதிகரிப்புக்கு காரணம் என அந்த சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி கூறியுள்ளார்.
தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோருக்கு அதன் பலனை அடையும் வகையில் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.