இலங்கையின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தை வலுப்படுத்த பங்களிப்பு வழங்கியுள்ள நிறுவனம்

இலங்கையின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தை வலுப்படுத்த பங்களிப்பு வழங்கியுள்ள நிறுவனம்

இலங்கையின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தை வலுப்படுத்துவதற்காக, உலகளாவிய ஆடை வடிவமைப்பு நிறுவனமான மைக்கல் கோர்ஸ் (Michael Kors) நிறுவனத்திடம் இருந்து 2.7 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 88 கோடி இலங்கை ரூபா) பங்களிப்பை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) வரவேற்றுள்ளது.

இந்த ஆதரவு, மைக்கல் கோர்ஸ் நிறுவனத்தின் நீண்டகாலமாகச் செயற்படுத்தப்படும் “Watch Hunger Stop” பிரசாரத்தின் மூலம் வழங்கப்படுகிறது

இது உலக உணவு திட்டத்தின் வீட்டுத் தோட்டப் பாடசாலை உணவூட்டும் (Home-Grown School Feeding - HGSF) முயற்சிக்கு உதவும்.

இலங்கையின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தை வலுப்படுத்த பங்களிப்பு வழங்கியுள்ள நிறுவனம் | Contribution Strengthening School Feeding Program

இந்த மாத ஆரம்பத்தில், உலக உணவு திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் பருத்தி-லினன் கலவையில் தயாரிக்கப்பட்ட இரண்டு சிறப்புப் பதிப்பு டி-ஷர்ட்களை மைக்கல் கோர்ஸ் அறிமுகப்படுத்தியது.

இந்த டி-ஷர்ட்டுகளில், இலங்கையில் உலக உணவு திட்டத்தின் வீட்டுத் தோட்டப் பாடசாலை உணவூட்டும் திட்டத்தின் மூலம் விளைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அக்டோபர் முதலாம் திகதி முதல், 40 டொலர் விலையிடப்பட்ட இந்த டி-ஷர்ட்டுகள் michaelkors.com இணையதளத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மைக்கல் கோர்ஸ் கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளன.

இலங்கையின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தை வலுப்படுத்த பங்களிப்பு வழங்கியுள்ள நிறுவனம் | Contribution Strengthening School Feeding Program

இதன் மூலம் கிடைக்கும் அனைத்து லாபமும் உலக உணவுத் திட்டத்துக்கு நன்கொடையாக வழங்கப்படும் என தெரியவருகிறது.