கொவிட்-19: ரஷ்யாவில் ஒரேநாளில் 5,212பேர் பாதிப்பு- 129பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: ரஷ்யாவில் ஒரேநாளில் 5,212பேர் பாதிப்பு- 129பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 212பேர் பாதிப்படைந்ததோடு, 129பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை எட்டு இலட்சத்து 82ஆயிரத்து 347பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 14ஆயிரத்து 884பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு இலட்சத்து 77ஆயிரத்து 286பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஆறு இலட்சத்து 90ஆயிரத்து 207பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.