புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று (19.10.2025) மாலை 4:00 மணி முதல் நாளை (20.10.2025) மாலை 4:00 மணி வரை பின்வரும் பகுதிகளில் இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முதல் நிலை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டம்: - ஹல்துமுல்ல - பசறை
காலி மாவட்டம்: - நாகொட - எல்பிட்டிய - நெலுவ
கண்டி மாவட்டம்: - உடுநுவர - உடுதும்பர
கேகாலை மாவட்டம்:- மாவனெல்லை - ருவன்வெல்ல - அரநாயக்க - ரம்புக்கன - கேகாலை - புலத்கொஹுபிட்டிய - யட்டியந்தோட்டை - கலிகமுவ
மாத்தளை மாவட்டம்: - ரத்தோட்ட - யடவத்தை - உக்குவெல - பல்லேபொல - அம்பன்கங்க கோரல - லக்கல - நாவுல
நுவரெலியா மாவட்டம்: - அம்பகமுவ - ஹங்குரன்கெத்த - வலப்பனை
இரத்தினபுரி மாவட்டம்: - கலவானை - இம்புல்பே - எஹெலியகொடை - இரத்தினபுரி