மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : 20 ஆயிரம் ரூபாயால் குறைந்த தங்க விலை

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : 20 ஆயிரம் ரூபாயால் குறைந்த தங்க விலை

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் இன்று (18) குறைவடைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று 20,000 ரூபாயினால் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு சந்தை தரவுகள் குறிப்பிடுகின்றன.

நேற்றைய தினம் (17) 379,200 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 360,800 ரூபாவாக குறைந்துள்ளது.

இதேவேளை, நேற்று 410,000 ரூபாவாக இருந்த 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 390,000 ரூபாவாக குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : 20 ஆயிரம் ரூபாயால் குறைந்த தங்க விலை | Happy News Gold Price In Srilanka Drop By Rs 20000

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்தமையால் இலங்கையிலும் தங்க விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.