தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; கைதுக்கு தடையாக இருந்த பெண்களுக்கு பிணை

தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; கைதுக்கு தடையாக இருந்த பெண்களுக்கு பிணை

வாழைச்சேனை கிண்ணையடி பிரம்படி தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பணையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரை கைது செய்வதற்கு தடையாக இருந்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவுபொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பயனாக கிண்ணையடி பிரம்படித்தீவு ஆற்றில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பத்து பரல்களில் 1685 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; கைதுக்கு தடையாக இருந்த பெண்களுக்கு பிணை | Person Caught Over Secret Info In Tamil Area

கசிப்பு உற்பத்தி உடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.