8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர்

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர்

இந்தியா நெல்லை மேலப்பாளையம் பகுதியில் 8 வயது சிறுமிக்கு 60 வயதுடைய முதியவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ள கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, குறித்த முதியவரை கைது செய்துள்ளனர்.

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர் | 60 Year Old Man Sexually Assaulted 8 Year Old Girl

இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தில், குற்றம் சாட்டப்பட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.