நீச்சல் பயிற்சியின் போது நடந்த விபரீதம்: 5 வயது சிறுவன் பலி

நீச்சல் பயிற்சியின் போது நடந்த விபரீதம்: 5 வயது சிறுவன் பலி

உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இந்த விபத்து நேற்று (08) மாலை நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இந்த சிறுவன் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவுடன் நீச்சல் பயிற்யாளரின் உதவியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவன் நீரில் மூழ்கியுள்ளான்.

நீச்சல் பயிற்சியின் போது நடந்த விபரீதம்: 5 வயது சிறுவன் பலி | Preschooler Drowns In Nugegoda Hotel Pool

இதன்போது, சிறுவன் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.

மேலும், மிரிஹான காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.