பெண் மருத்துவரை துர்நடத்தைக்கு உட்படுத்திய நபர் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது

பெண் மருத்துவரை துர்நடத்தைக்கு உட்படுத்திய நபர் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துர்நடத்தைக்கு உட்படுத்தியதாக  குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் பிணையில்  செல்ல அனுமதிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அதற்கமைய, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 500,000 ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையிலும் செல்ல அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் வீட்டில் சோதனையிடப்பட்ட போது மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெண் மருத்துவரை துர்நடத்தைக்கு உட்படுத்திய நபர் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது | Man Released And Again Arrested

இதன்படி, குறித்த  வழக்கு தொடர்பாக, சந்தேக நபரை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.