இலங்கையில் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து பெண்; தகவல் வழங்கினால் பரிசு!

இலங்கையில் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து பெண்; தகவல் வழங்கினால் பரிசு!

நெதர்லாந்து தம்பதி ஒன்றினால் தத்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர், இலங்கையில் தந்னை பெற்ற தாயை தேடி வருகிறார்.

தனது தாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசு வழங்குவதாக 35 வயதான அந்த பெண் , இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து பெண்; தகவல் வழங்கினால் பரிசு! | Netherlands Adopted Girl Search Mother Sri Lanka1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி களுத்துறை பொது மருத்துவமனையில் எண் 3570 கொண்ட இலங்கை பிறப்புச் சான்றிதழில் அவரது பெயர் அசோகா என பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது தாயார் பெயர் சேனநாயக்க முதியன்செலகே சாந்தனி என குறிப்பிடப்பட்டுள்ளது.

1985ஆம் மே மாதம் 13ஆம் திகதியன்று களுத்துறை நகரப் பிரிவின் மருத்துவச் செயலாளர் எம். எச். செனரத்தினால் பதிவு செய்யப்பட்டது. பிறப்பு பதிவுக்கான தாயாக 24 வயதான சேனநாயக்க முதியன்செலகே சாந்தனி அறிவிக்கப்பட்டார்.

அவரது முகவரி கந்தகஹவில, பயாகல என வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவரது நிரந்தர முகவரி மாத்தறை என வழங்கப்பட்டுள்ளது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியன்று இந்தக் குழந்தை, வெர்னா எலிசபெத் ஜோஸ்பினா பாடன் என்பவரால் நெதர்லாந்தைச் சேர்ந்த ஜேக்கபஸ் ஹெர்மன் மேரி பாடன் மற்றும் எலிசபெத் வில்ஹெல்மினா பாடன் ஆகியோரால் சட்ட பூர்வமாக தத்தெடுக்கப்பட்டது.

கொழும்பு மாவட்ட நீதிபதி எச்.எஸ். அகலவத்தே கையொப்பமிட்ட 1985ஆம் மே மாதம் 15ஆம் திகதியிட்ட உத்தரவிற்கமைய, குழந்தையை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை தாயைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், தயவுசெய்து நெதர்லாந்து எண் +32474754341 அல்லது +94741120821 என்ற இலங்கை எண்ணில் அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.