தமிழர் பகுதியொன்றில் பெரும் துயரை ஏற்படுத்திய இளம் குடும்பஸ்தரின் மரணம்

தமிழர் பகுதியொன்றில் பெரும் துயரை ஏற்படுத்திய இளம் குடும்பஸ்தரின் மரணம்

முல்லைத்தீவு - உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குரவில் பகுதியினை சேர்ந்த 26 வயது குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (20) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியொன்றில் பெரும் துயரை ஏற்படுத்திய இளம் குடும்பஸ்தரின் மரணம் | Death Of Family Man Brings Sorrow In Tamil Areaபுதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மை வீதியினை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 26 வயது குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் மூங்கிலாறு பிரதேச மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட போது, அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரோத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விபத்தை ஏற்படுத்திய மற்றைய இளைஞனையும் மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.