கனரக வாகனங்களால் விபத்து - பாடசாலை நாட்களில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

கனரக வாகனங்களால் விபத்து - பாடசாலை நாட்களில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் எரிப்பொருள் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு பாடசாலை வேன் மணல் டிப்பர் லொறியில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல்களை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்தார்.

அதற்கமைய, அந்தக் காலங்களில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகனங்கள் வீதியில் கிடைக்கும் இடங்களில் நிறுத்தப்பட வேண்டும் என தீபானி வீரக்கோன் கூறினார்.

கனரக வாகனங்களால் விபத்து - பாடசாலை நாட்களில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Fuel Transportation Suspended During School Hours

இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கடந்த 4 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.