பிரேஸிலில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்தது!

பிரேஸிலில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்தது!

பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளது. இதன்படி, பிரேஸிலில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு 7 இலட்சத்து 10 ஆயிரத்து 887பேர் பாதிப்படைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில், 18,925பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 813பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேஸிலில், ஒட்டுமொத்தமாக 37,312பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 347,973 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 325,602பேர் பூரண குணமடைந்துள்ளனர். 8,318பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.