பிரதமர் மஹிந்தவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

பிரதமர் மஹிந்தவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு நேபாள பிரதமர் ஷர்மா ஒலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே அனைத்து மாவட்டங்களிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது.

முடிவுகள் பூரணமாக வெளிவந்துள்ள நிலையில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி தொலைபேசி அழைப்பு மூலம் தனது வாழ்த்துக்களை மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளார்.

நேபாள பிரதமருக்கு மஹிந்த ராஜபக்ஷவும் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.