பலேர்மோ டென்னிஸ்: காலிறுதிக்குள் நுழைந்தார் கமிலா ஜியோர்கி

பலேர்மோ டென்னிஸ்: காலிறுதிக்குள் நுழைந்தார் கமிலா ஜியோர்கி

பெண்களுக்கே உரித்தான ‘ஃபெமினிலி டி பலேர்மோ’ பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றில் இத்தாலியின் கமிலா ஜியோர்கி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில், இத்தாலியின் கமிலா ஜியோர்கியும், ஸ்லோவேனியாவின் கஜா ஜுவானும் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டில், சிறப்பாக விளையாடிய கஜா ஜுவான் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் மீண்டெழுந்த கமிலா ஜியோர்கி செட்டை 6-2 என எளிதாகக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது.

இதில் யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடிய கமிலா ஜியோர்கி, 6-4 என செட்டைக் போராடிக் கைப்பற்றி வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்குள் நுழைந்த கமிலா ஜியோர்கி, உக்ரேனின் தயானா யஸ்த்ரெம்ஸ்காவை எதிர்கொள்ளவுள்ளார்.