கொடுத்த கடனை வாங்க சென்ற இளைஞன் கொலை

கொடுத்த கடனை வாங்க சென்ற இளைஞன் கொலை

கொடுத்த கடன் தொகையை வாங்க சென்ற இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். நாவுல பொலிஸ் பிரிவின் நிகுல பகுதியில் நேற்று (05) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். கடனாக வழங்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

கொடுத்த கடனை வாங்க சென்ற இளைஞன் கொலை | Man Was Killed While Going To Collect A Loan

சம்பவத்தில் தம்புள்ளை, களுந்தேவ பகுதியைச் சேர்ந்த 23 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நிகுல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.