முடிவுக்கு வந்த அர்ஜுன ரணதுங்கவின் 19 ஆண்டுகால நாடாளுமன்ற வாழ்க்கை

முடிவுக்கு வந்த அர்ஜுன ரணதுங்கவின் 19 ஆண்டுகால நாடாளுமன்ற வாழ்க்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான அர்ஜுன ரணதுங்கவின் 19 ஆண்டு நாடாளுமன்ற காலம் முடிவுக்கு வந்துள்ளது.

இம்முறை பொதுதேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க தொடர்சியாக 4 முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

முன்னாள் அமைச்சர் ருவான் விஜேவர்தனவும் இம்முறை நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெறத் தவறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.