UPDATE – வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியீடு
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை அந்த அந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்றைய தினம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது தேர்தல் நடைபெறும் புதிய திகதி குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் கலந்துரையாடலின் முடிவில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என்பதுடன், தேர்தலுக்கான புதிய திகதியை இந்த வாரத்திற்குள் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, நாளை அல்லது எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தேர்தல் இடம்பெறவுள்ள புதிய திகதி அடங்கிய வர்த்தமானியை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.