கொழும்பில் நபரின் உயிரை பறித்த உணவு - அதிர்ச்சியில் குடும்பத்தினர்

கொழும்பில் நபரின் உயிரை பறித்த உணவு - அதிர்ச்சியில் குடும்பத்தினர்

ஹோமாகம, பிட்டிபன தெற்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த ஒருவர், சாப்பிட்ட மீன் பனிஸ் துண்டு தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற நகர சபை சாரதியான 72 வயதான சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நபர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். காலையில் அவர் மீன் பனிஸ் சாப்பிட விரும்புவதாக கூறியதால், குடும்பத்தினர் அவருக்கு அதனை கொடுத்துள்ளளனர்.

அதன் ஒரு பகுதியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக அது அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் நபரின் உயிரை பறித்த உணவு - அதிர்ச்சியில் குடும்பத்தினர் | Man Dies While Eating Bun

பின்னர், குடும்பத்தினர் 1990 சுவசேரியா அம்புலன்ஸை அழைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவிருந்தபோது, அங்குள்ள செவிலியர் நோயாளியை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார்.

பிரேத பரிசோதனையில், அவர் சாப்பிட்ட மீன் பனிஸின் ஒரு துண்டு நுரையீரலுக்குள் சென்று சிக்கியதால் ஏற்பட்ட சுவாசக் கோளாறே மரணத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.

இந்த துயர சம்பவம் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.