ரம்புட்டானால் நாட்டில் அதிகரித்துள்ள விபத்துக்கள்

ரம்புட்டானால் நாட்டில் அதிகரித்துள்ள விபத்துக்கள்

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ரம்புட்டான் மரங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக, வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கச் சிலர் மின்சாரக் கம்பிகளை இடுவதால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் விராஜ் ரோஹண அபேகோன் தெரிவித்தார்.

ரம்புட்டானால் நாட்டில் அதிகரித்துள்ள விபத்துக்கள் | Fruit Spill Causes Rise In Accidents Nationwide

அதன்படி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுவர்களுக்கு ரம்புட்டானை ஊட்டும்போது பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.