நாடு முழுவதும் நடைபெறவுள்ள முக்கிய சேவையின் வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் நடைபெறவுள்ள முக்கிய சேவையின் வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இன்று(15) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணி(JPTU) அறிவித்துள்ளது.

மேலதிக நேரப் பிரச்சினை தொடர்பாகவே இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அத்துடன், 2016 முதல் அஞ்சல் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மேலதிக நேரப் பணிகள் தேவைப்படும் அஞ்சல் சேவைகள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் என்று தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் நடைபெறவுள்ள முக்கிய சேவையின் வேலைநிறுத்தம் | Nationwide Strike In Essential Services

நீண்டகாலமாக நிலவும் ஆட்சேர்ப்பு பிரச்சினைகளை மேலும் தாமதமின்றி தீர்க்குமாறும் தொழிற்சங்கம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.