யாழில் முதியவர் எடுத்த விபரீத முடிவு ; அதீத நோயால் ஏற்பட்ட சோகம்

யாழில் முதியவர் எடுத்த விபரீத முடிவு ; அதீத நோயால் ஏற்பட்ட சோகம்

யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் ஒருவர் நேற்று தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந்த 73 வயதுடையவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

யாழில் முதியவர் எடுத்த விபரீத முடிவு ; அதீத நோயால் ஏற்பட்ட சோகம் | Elderly Man In Jaffna Takes Tragic Decision

குறித்த முதியவர் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் நேற்று தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியுள்ளார்.

அவரை மீட்ட உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகள் மற்றும் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.