தானியங்கி கேட்டில் சிக்கி பரிதாபமாக பலியான நபர்
பேருவளை, சமத் மாவத்தையில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர், தானியங்கி வாயிலில் (Gate) சிக்கி உயிரிழந்துள்ளார்.
தொலை இயக்கி (Remote Control) மூலம் இயக்கப்படும் வீட்டின் பிரதான வாயிலில் சிக்கி இந்த நபர் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பேருவளை, மஹகொட பகுதியைச் சேர்ந்த 55 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026