யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதியை சேர்ந்தவர்களுக்கு அவசர எச்சரிக்கை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதியை சேர்ந்தவர்களுக்கு அவசர எச்சரிக்கை

புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு இன்று (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (16.06.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு சுமார் 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்பரப்புகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதியை சேர்ந்தவர்களுக்கு அவசர எச்சரிக்கை | Heavy Rain With Thunder Weather In Tamil

இதனால் மறு அறிவித்தல் வரை கடல்சார் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் இந்த பகுதிகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு அமைய மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.