நீராட சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை....!

நீராட சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை....!

மகாவெளி கங்கையில் நீராடச்சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 6 மணியளவில் தான் நீராடச்செல்வதாக தெரிவித்து விட்டு மகாவெளி கங்கைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையிலேயே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மீட்கப்பட்டுள்ள குறித்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.