இலங்கையில் மீன்களின் விலை திடீர் அதிகரிப்பு

இலங்கையில் மீன்களின் விலை திடீர் அதிகரிப்பு

இலங்கையில் மே மாதம் முதல் இருந்தே மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதனால், மீன்களை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மீன் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ஹட்டனில், தலபத். கொப்பரா ஆகிய மீன்களின் ஒரு கிலோ கிராமுக்கான சில்லறை விலை, 3,200 ரூபாய் முலை 3,400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இலங்கையில் மீன்களின் விலை திடீர் அதிகரிப்பு | Fish Prices Increase Suddenly In Sri Lanka

தோரா 3,800 ரூபாய், கெலவல்லா 2,900 ரூபாய், பலயா 1,800 ரூபாய், பரவு 2,000 முதல் 2,200 ரூபாய் வரை. லின்னா 1,300 ரூபாய், சாலையோ 900 ரூபாய், பியா மெஸ்ஸன் 900 ரூபாய் உருலோ 1,700 ரூபாய், நெத்தலி மீன் 700 ரூபாய்,

இறால் 2,400 ரூபாய். ஆகிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றது, நாட்டில் தற்போது மோசமான வானிலை மற்றும் பருவமழை காரணமாக கடல் கொந்தளிப்பாக இருப்பதாகவும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்வதில்லை என்றும்,   வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை மீன் விலை உயர்வு இன்னும் பல நாட்களுக்கு தொடரும் என்றும், இதற்கு இணையாக குளத்து மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.