கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த வைத்தியசாலையில் தீ விபத்து: 8 பேர் உயிரிழப்பு

கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த வைத்தியசாலையில் தீ விபத்து: 8 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம்- அகமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியிலுள்ள வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

குறித்த வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 8பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்  40 கொரோனா நோயாளிகள் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தீ விபத்தில் உயிரிழந்த அனைவரும் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்கள் என்று பொலிஸாரின் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வைத்தியசாலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.