தமிழர் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

தமிழர் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

தீ காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் - மடு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனக்கு தானே தீ வைத்துள்ளார்.

இதனால் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் எடுத்த விபரீத முடிவு | Young Family Woman Dies At Jaffna Hospital

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.