
மக்களே அவதானம்.....! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் சில பகுதிகளுக்கு சிவப்பு மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07.05.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் சிவப்பு மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.30 வரை நடைமுறையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.