மின் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கலாம்: விடுக்கப்படும் எச்சரிக்கை

மின் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கலாம்: விடுக்கப்படும் எச்சரிக்கை

இந்த ஆண்டு டிசம்பரில் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன எச்சரிக்கிறார்.

காலியில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொருளாதாரம் குறித்த தனது புரிதலின்படி, நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் நாடு வீழ்ச்சி அடைந்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இலங்கையை கவனித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறினார். 

மின் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கலாம்: விடுக்கப்படும் எச்சரிக்கை | Electricity Bills To Increase Threefold December