டெங்கு தொற்று பரவும் இடங்கள்..

டெங்கு தொற்று பரவும் இடங்கள்..

கொழும்பு மாநகர சபை உட்பட்ட பிரதேசங்களில் டெங்கு தொற்று பரவும் 571 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை காவற்துறை நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது குறித்த பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் 368 சிவப்பு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.