
தனிமைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வாக்களிப்பில் ஈடுபட்ட லங்காபுர பிரதேச சபையின் தலைவர்
லங்காபுர பிரதேச சபையின் தலைவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் செயன்முறையை இன்னும் பூரணமாக முடிக்காத நிலையில் அவரும், அவரது குடும்பத்தாரும் நேற்றைய தினம் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்திருந்தனர்.
அவர்கள் வாக்களித்ததாக தகவல் கிடைத்ததும் பொலிஸாரும் பொது சுகாதார அதிகாரிகளும் அவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என கூறப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்றுடைய நபர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து லங்காபுரா பிரதேச செயலகம், பிரதேச சபா மற்றும் ஒரு பிராந்திய அரசு வங்கி ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.