சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: குடும்பப் பெண் பலி

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: குடும்பப் பெண் பலி

கிளிநொச்சி - மருதநகர் பகுதியில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்துக்குள்ளானதில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த (20) ஆம் திகதி குறித்த பகுதியில் எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

58 வயதுடைய பெண்ணொருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பெண் அணிந்திருந்த ஆடையில் தீப்பற்றியுள்ள நிலையில் அவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: குடும்பப் பெண் பலி | Woman Death Cooking Gas Leak

இந்தநிலையில், இன்றையதினம் (22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.