வீட்டு தோட்டத்தில் இருந்து எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

வீட்டு தோட்டத்தில் இருந்து எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

அனுராதபுரம், கெகிராவ பொலிஸ் பிரிவின் மெதவெவ பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்தில் இருந்து எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கெகிராவ பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, ​​சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கெகிராவ பகுதியை சேர்ந்த 40 வயதுடைய திருமணமான மூன்று பிள்ளைகளின் தாய் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் அனுராதபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தவர் என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டு தோட்டத்தில் இருந்து எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு | Womens Body Found In A Garden In Anuradhapura

உயிரிழந்த பெண்ணின் எரிந்த உடல், அவர் வசித்து வந்த வீட்டிலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டத்தில் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, இந்தப் பெண் நேற்று காலை தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.