வாக்குப் பெட்டிகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்பு : ஜாலிய சேனாரத்ன

வாக்குப் பெட்டிகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்பு : ஜாலிய சேனாரத்ன

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பான முறையில் பொதியிடப்பட்டு வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பப்படும் என்றார்.

வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாக்குப் பெட்டிக்கும் ஆயுதமேந்திய அதிகாரியின் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அந்தவகையில் 3067 ஆயுதம் தாங்கிய நடமாடும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படும் அனைத்து வழித்தடங்களும் ஆயுதமேந்திய பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஆயுதமேந்திய பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதைக் கண்காணிக்க தேர்தல்கள் ஆணைக்குழு சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளது.

அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களுக்கு முழு ஆயுத பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு நிலையத்திற்கும் பொலிஸ் விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்