நாட்டை வேலை தளமாக மாற்ற வேண்டும்- மஹிந்த

நாட்டை வேலை தளமாக மாற்ற வேண்டும்- மஹிந்த

நாட்டை ஒரு வேலை தளமாக மாற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) காலை பொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது,  “அமைதியான முறையில் தேர்தலை நடத்தியுள்ளோம்.

மேலும்  இந்த தேர்தலில் எந்ததொரு வன்முறைச் சம்பவங்களோ கொலைகளோ பதிவாகவில்லை.

இதேவேளை ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களும் இணைந்துள்ளமையினால் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 5 இடங்களை கைப்பற்றுவோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை அபிவிருத்தி பாதையின் கீழ் நிச்சயம் கொண்டுச் செல்வார் என நம்புகின்றோம்.

மேலும் இந்தத் தேர்தலில் நாம் அவதானித்த முக்கிய விடயம் என்னவென்றால், மக்கள் திருட்டு, மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக அணிதிரண்டு வருகின்றனர்.

எனவே, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது  தேர்தலில் வெற்றிப்பெறுபவர்களின் முக்கிய பொறுப்பாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.