பொதுத் தேர்தல் – வாக்களிப்பு நிறைவு: 60 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவு

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு நிறைவு: 60 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவு

இலங்கை சோசலிசக் குடியரசின் 9ஆவது நாடாளுமன்றத்துக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் 60 வீதமான வாக்குகள் பதிவாகியிருந்ததாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய வாக்களிப்பு நடவடிக்கைகளின்போது 758 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதேநேரம், இன்றைய அனைத்து மாவட்டங்களிலும் பாரியளவிலான வன்முறை சம்பவங்களின்றி அமைதியான முறையில் வாக்கு பதிவு நடவடிக்கைள் நிறைவடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.