மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.

இதற்கு அமைமாக காங்கேசந்துறையில் இருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அடிக்கடி 60 – 70 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற் பிராந்தியம் அடிக்கடி கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும். இந்த கடற் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானதாக இருக்கும் என்றும் இவர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பேருவளையில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோர பகுதிகளில் கடல் அலை 2 – 2.5 மீற்றருக்கு உயரக்கூடும். கடல் அலை கரைக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.