
மக்களுக்கு பசில் ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதி
மக்களின் ஆதரவில் பொதுஜன பெரமுனவின் தலைமையில் அரசாங்கம் உருவாக்கப்படும்போது மக்களின் நலன்களுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்படுமென அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) மதியம், தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வரலாற்றில் முதல் தடவையாக சிறந்த அரசியல் கட்சியொன்று உருவாக்கப்பட்டது.
மேலும் குறித்த கட்சி குறுகிய காலத்திலேயே மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்தமை இலங்கை வரலாற்றில் முக்கிய விடயமாகும்.
மக்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட எமது கட்சி நடைபெறுகின்ற தேர்தலில் வெற்றியடைந்து ஆட்சியமைத்தால் , மக்களின் நலன்களுக்கு மாத்திரமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.