துடைப்பத்தால் தாக்கப்பட்டு பலியான முதியவர் ; விசாரணைகள் ஆரம்பம்

துடைப்பத்தால் தாக்கப்பட்டு பலியான முதியவர் ; விசாரணைகள் ஆரம்பம்

சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவில் துடைப்பத்தால் தாக்கப்பட்டதில் 78 வயதுடைய  முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துடைப்பத்தால் தாக்கப்பட்டு பலியான முதியவர் ; விசாரணைகள் ஆரம்பம் | Old Man Who Was Beaten By A Broom Inquiries Begin

தாக்குதலை நடத்திய சந்தேக நபர் 73 வயதுடைய பெண் என்றும்,  கொலை செய்யப்பட்ட நபர்  பெண்ணின் வீட்டிற்கு வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது அந்தப் பெண் அவரை துடைப்பத்தால் தாக்கி தள்ளிவிட்டதாகவும் பின்னர் அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  மேலதிக விசாரணைகளை  சப்புகஸ்கந்த பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.