பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் அரிசி வியாபாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் அரிசி வியாபாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்வரும் புதுவருடக் காலத்தில் சம்பா, கீரி சம்பா உள்ளிட்ட பல்வேறு அரிசி வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் முறையான அறுவடையை பெற முடியாமல் போனதே இதற்கு காரணம் என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதுள்ள நெற்பயிர்களை அறுவடை செய்வதற்கு தேவையான இயந்திரங்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் அரிசி வியாபாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை | Rice Traders Issue Warning In New Year Season

இதேவேளை, அரிசி நெருக்கடியின் போது சந்தையை நிர்வகிக்கும் அதிகாரத்தை அரசாங்கம் இழந்ததாக தேசிய விவசாய சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.