இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறித்து வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறித்து வெளியான தகவல்

இந்த ஆண்டு வாகன இறக்குமதியின் போது எவ்வித வரி திருத்தங்களும் செய்யப்படாது என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ (Duminda Hulangamuwa) தெரிவித்துள்ளார்.

அத்துடன், சந்தையில் வாகன விலைகளிலும் இந்த ஆண்டு எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஊடகம் ஒன்றில் நேற்று (24) இரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, துமிந்த ஹுலங்கமுவ இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் 300 - 350 பில்லியன் வரை வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறித்து வெளியான தகவல் | No Tax Adjustments Made During Vehicle Imports

வரிகள் குறைக்கப்படும் என்று யாராவது எதிர்பார்த்தால், இந்த ஆண்டு அது குறைக்கப்படாது.

இந்த ஆண்டு வாகன வரிகளை குறைக்க முடியாது என்று எங்கள் ஐ.எம்.எப் (IMF) ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.