
யாழில் 17 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு
யாழில் சிறுமி ஒருவர் அதிக மாத்திரைகளை உட்கொண்டு தவறான முடிவெடுத்து நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
இதன்போது கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி கடந்த 20ஆம் திகதி தவறான முடிவெடுத்து அதிக மாத்திரைகளை உட்கொண்டார்.
இந்நிலையில் அவரது பெற்றோர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை (21) உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.