பூமியை விட 5 மடங்கு பெரியதான வைரங்கள் நிறைந்த புதிய கிரகம்

பூமியை விட 5 மடங்கு பெரியதான வைரங்கள் நிறைந்த புதிய கிரகம்

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. அதாவது வைரங்கள் நிறைந்த இந்த புதிய கிரகம் பூமியை விட 5 மடங்கு பெரியதாக உள்ளதாக கூறப்படுகின்றது.

பூமியிலிருந்து 41 ஒளி ஆண்டுகள் தொலைவில் நமது பிரபஞ்சத்தில் 55 கேன்க்ரி இ என்ற சூப்பர்-எர்த் கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது.

பூமியை விட 5 மடங்கு பெரியதான வைரங்கள் நிறைந்த புதிய கிரகம் | New Planet Full Diamonds 5 Times Bigger Than Earth

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கோள் பூமியைப் போல ஐந்து மடங்கு பெரியது. மேலும், இந்த கிரகத்தில் அற்புதமான ரகசியங்கள் இருக்கிறது. சுமார் 2,400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன், 55 கேன்க்ரி இ நட்சத்திரத்தைச் சுற்றி வர 17 மணிநேரம் மட்டுமே ஆகும் என்று நாசா தெரிவித்துள்ளது.

முக்கியமாக, புதிய கிரகத்தில் கணிசமான அளவு வைரங்கள் இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

மேலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்தின் நிறை, மூன்றில் ஒரு பங்கு வைரங்களால் ஆனது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

பூமியை விட 5 மடங்கு பெரியதான வைரங்கள் நிறைந்த புதிய கிரகம் | New Planet Full Diamonds 5 Times Bigger Than Earth

இந்த கிரகத்தில் வைரம் போன்ற கார்பன் சார்ந்த கட்டுமானங்கள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதனை பற்றிய ஆராய்ச்சியை தொடரும் போது இந்த ரகசியங்களுக்கான புதிய பரிமாணங்கள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.