கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை: 8 பேர் கைது

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை: 8 பேர் கைது

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கிராண்ட்பாஸில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கூர்மையான பொருட்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று இரவு வெல்லம்பிட்டியவில் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை: 8 பேர் கைது | Grandpass Double Murder 08 Suspects Arrested

சந்தேக நபர்களிடமிருந்து தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 02 கத்திகள் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், கிராண்ட்பாஸ் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.