யாழில் கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடால் தவறான முடிவெடுத்த கர்ப்பிணிப் பெண்

யாழில் கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடால் தவறான முடிவெடுத்த கர்ப்பிணிப் பெண்

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார்.

இதன்போது வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடால் தவறான முடிவெடுத்த கர்ப்பிணிப் பெண் | Pregnant Woman Making Wrong Decision In Jaffna

குறித்த பெண் ஆறு மாதங்கள் கர்ப்பிணியாக காணப்படுகின்றார். கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த 2ஆம் மாதம் 20ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.

இந்நிலையில் அயலவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் நாளையதினம் நடைபெறவுள்ளது.