
தகாத உறவால் நண்பனை கொன்றவருக்கு மரண தண்டனை
பொலன்னறுவையில் கள்ளக்காதலால் நண்பனை கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
சம்பவத்தில் மண்வெட்டியால் அடித்து கொலை செய்ததற்காக நீதிமன்றத்தில் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பொலன்னறுவை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தனது நண்பரை மண்வெட்டியால் சாகும் வரை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்ட பிரதிவாதி ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, கொலைக் குற்றத்திற்காக பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக கூறிய மேல் நீதிமன்ற நீதிபதி,
பிரதிவாதியை கண்டி பல்லேகலையில் உள்ள தும்பர சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில் அவர் இறக்கும் வரை தூக்கு மேடையில் தூக்கிலிட உத்தரவிடுவதாகக் தெரிவித்தார்.
கடந்த 2015 நவம்பர் 1 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தின் அதிகார பிரிவிற்கு உட்பட்ட கவுடுல்லவில் பி.ஜி. ரன்பண்டாவை மண்வெட்டியால் வெட்டிக் கொன்றதாகக் கூறி, இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 296 இன் கீழ், பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
பொலன்னறுவை, கவுடுல்ல பகுதியைச் சேர்ந்த காமினி ரணவீர என்ற நபருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிரதிவாதியான காமினி ரணவீர, உயிரிழந்தவரின் மனைவியுடன் கொண்டிருந்த கள்ளக்காதலின் விளைவாகவே இந்தக் கொலை நடந்ததாக நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்துள்ளது